ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் | Festive mode started in Rameshwaram Ramanathaswami temple

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (17/07/2017)

கடைசி தொடர்பு:12:57 (04/07/2018)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா இன்று துவங்கி 17 நாள்கள் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான ஆடி அமாவாசை ஜூலை 23-ம் தேதியும் அம்பாள் தேரோட்டம் 25- தேதியும் நடைபெறவிருக்கிறது. 

இத்திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை நடந்தது. ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு அம்பாள் சந்நிதியில் உள்ள கொடி மரத்தில் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள், கோயில் அலுவலர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருவிழா நாள்களின் காலை மாலை வேளைகளில் அம்பாள் வீதி உலாவும் அதைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.