வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (17/07/2017)

கடைசி தொடர்பு:13:36 (17/07/2017)

டெஸ்ட் போட்டியிலும் சாதிக்குமா ஜிம்பாப்வே? #ZimVsSL

ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 356 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் கிரேய்க் எர்வின் 160 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் துவக்கிய இலங்கை அணி 346 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக உபுல் தரங்கா 71 ரன்கள் எடுத்தார்.

10 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கிய ஜிம்பாப்வே அணி, 59 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு களமிறங்கிய ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசா தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். மால்கம் வாலர் அரைசதம் அடித்தார். நேர்த்தியாக விளையாடிய ரசா 127 ரன்களிலும், மால்கம் வாலர் 68 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 

ஜிம்பாப்வே - இலங்கை டெஸ்ட் போட்டி 2017

நான்காம் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்து, 350 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு டெஸ்ட் வெற்றியையும் கைப்பற்றும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க