Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஒவ்வொரு வீட்டுக்கும் வெற்றிலை கொடிக்கால்'- 10 ஆண்டுகளுக்கு பிறகு உடன்குடியில் மீண்டும் உயிர்பெறும் வெற்றிலை வளர்ப்பு

குறைந்து வரும் வெற்றிலை உற்பத்தியை  அதிகரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதிகளிலுள்ள வீடுகளில் வெற்றிலை கொடிக்கால் நட்டு வளர்க்க உள்ளதாக உடன்குடி பீர்க்கா வெற்றிலை விவசாயிகள் சங்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்து சுபகாரியங்கள், கோயில் திருவிழாக்களில் தாம்பூலத்தில் தவறாமல் இடம் பிடிப்பது வெற்றிலை. விஷத்தையும் முறிக்கும் தன்மையுடைய வெற்றிலை, கை வைத்தியத்திலும் சிறப்பிடம் பெறுகிறது. ’சோழவந்தான் வெற்றிலை’, ’கும்பகோணம் வெற்றிலை’ என தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெற்றிலை மகசூல் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், உடன்குடி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் வெற்றிலைக்கு தனி சிறப்புண்டு. அதிக காரத்தன்மையுடன் இருப்பதே இதன் சிறப்பு. இதற்கு காரணம் இப் பகுதி  வண்டல் மண்ணும், தாமிரபரணி தண்ணீரும்தான். சாதாரண நாட்களில் தினமும் 2ஆயிரம் கிலோவும், சீசன் காலங்களில் 5ஆயிரம் கிலோ வரை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதியாகிறது.

உடன்குடியின் அடையாளமே வெற்றிலை விவசாயமும், கருப்பட்டி உற்பத்தியும்தான். கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை இப்பகுதிகளில் நெல், வாழை சாகுபடிக்கு இணையாக வெற்றிலை கொடிக்கால் பயிரிடப்பட்டு வந்தது. ஆனால், குளம், கண்மாய்கள் தூர்வாரப்படாததாலும் பருவமழை சரிவர பெய்யாததாலும், அதிக நிலத்தடி போர்கள், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம் ஆகிய காரணங்களால் உடன்குடி சுற்றுவட்டாரத்திலுள்ள சுமார் 60 கிராமங்களில் நடந்து வந்த  வெற்றிலை விவசாயம் தற்போது குறிப்பிட்ட 20  கிராமங்களில் மட்டுமே நடந்து வரும் அளவுக்கு குறைந்துவிட்டது.  

உடன்குடியில் நடந்த வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 64வது ஆண்டு விழாவில் வெற்றிலை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பருவமழை தொடக்கத்தில் உடன்குடி பகுதிகளிலுள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் 10 வெற்றிலை கொடிக்கால் கொடி கொடுத்து வீட்டில் உள்ள காலி இடங்களில் வளர்க்கச் சொல்லி வீடுகளில் வெற்றிலைக் கொடியை படர விட வேண்டும். அழிந்து வரும் வெற்றிலை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். வெற்றிலை விவசாயத்தை விட்டுவிட்டு வேறு பயிர் சாகுபடிக்கு மாறிய விவசாயிகளை மீண்டும் வெற்றிலை விவசாயத்துக்கே வரவழைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close