வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (17/07/2017)

கடைசி தொடர்பு:15:20 (17/07/2017)

கடத்தப்பட்ட இந்தியர்கள் நிலை என்ன? அமைச்சர் சுஷ்மா அதிர்ச்சித் தகவல்!

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 பேரும், தீவிரவாதிகளுக்கும் ஈராக் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துகொண்டிருக்கும் பாதுஷ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

சுஷ்மா, sushma

கடந்த 2014ல் ஈராக்கில் இருந்த இந்தியர்கள் 39 பேரைக் கடத்தியது ஐஎஸ் தீவிரவாதக் குழு. கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். ஈராக்கில் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், கடந்த மூன்று வருடமாகக் கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்துவந்தது. இதனால், அவர்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றன. 

ஐஎஸ் தீவிரவாதிகள் மொசூல் நகரத்தைக் கைப்பற்றி இருந்த நிலையில், கிழக்கு மொசூல் நகரம் முற்றிலுமாக ஐஎஸ் பிடியிலிருந்து மீட்கப்பட்டது. ஆனால், அங்கு இன்னும் மக்கள் அனுமதிக்கப்படவில்லை.  மேற்கு மொசூல் பகுதியில் இன்னும் சண்டை ஓயவில்லை. 

இந்நிலையில், கடத்தப்பட்ட இந்தியர்கள் தற்போது ஈராக் ராணுவத்துக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை தொடர்ந்து நடந்துவரும் மொசூல் நகரத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் பாதுஷ் கிராமத்தில் உள்ள சிறையில் இருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க