வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (17/07/2017)

கடைசி தொடர்பு:10:37 (02/10/2017)

கிராம சபைக் கூட்டங்களுக்காகத் தொடரும் விழிப்பு உணர்வுப் பயணம்!

ullatchi, கிராம சபை

ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில், கிராம சபை கூட்டங்கள் நடக்க இருக்கிறது. இதற்கான, அவசியம் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கிராம மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த 'உள்ளாட்சி உங்களாட்சி', 'சட்டப் பஞ்சாயத்து இயக்கம்' என பல அமைப்புகள் ஒருங்கிணைந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15-ம் தேதி திருவள்ளுர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. இந்த பயணத்திற்கு கிராம மக்களிடம் தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது.

ullatchi, கிராம சபை

குத்தம்பாக்கத்தை தொடர்ந்து ஆலத்தூரில் கிராமசபை கூட்டம் மற்றும் உள்ளாட்சியில் மக்களின் அதிகாரம் பற்றி கிராம மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அதிகளவில் பெண்கள் பங்கேற்றனர். அப்போது, அவர்களின் நிலையை பகிர்ந்து கொண்ட பெண்கள், அங்கு நடக்கவிருக்கும் சிறப்பு கிராமசபையில் பங்கெடுப்போம் என்றும் உறுதியளித்தனர்.

ullatchi, கிராம சபை கூட்டம்

அதைதொடர்ந்து, பாண்டேஸ்வரம் கிராமத்தில் நடந்த இயற்கை வேளாண் பயிற்சி முகாமிலும் கிராமசபை தொடர்பான பரப்புரையோடு ஒரு ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்தது. உள்ளாட்சி மற்றும் கிராம சபை தொடர்பான கையேடு, துண்டறிக்கை மற்றும் சி.டிக்கள் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், வேலூரில் உள்ள காட்டுப்புத்தூர் கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி, சூளகிரி ஒன்றியம் பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இன்று தேன்கனிக்கோட்டை, நூறுந்துமலை கிராமத்திலும் விழிப்பு உணர்வு கூட்டங்கள் நடைபெறுகிறது.