Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை கலெக்டர் அலுவலகத்தை பதற வைத்த அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதி மக்கள்!

அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதி மக்கள் தெர்மாகோலுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை பரவை அண்ணா நகர் 10 வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு சாக்கடை கால்வாய் வசதிகள் மற்றும் சாலை வசதிகள் சரிவர இல்லை என்றும் அப்பகுதியில் இருக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் ஹவுஸிங் புரோமோட்டர்ஸ்கள் கழிவு நீரைப் பள்ளத்தை நோக்கி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி விட்டால் தங்களது தொழில் பாதிக்கும் என்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கழிவு நீரைத் தலைகீழாக வெளியிடுகின்றனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல நோய்கள் வந்து பாதிப்படைகிறது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

தெர்மாகோல் உடன் மனு அளிக்க வந்ததுக்கு என்ன காரணம் என்று அவர்களிடம் கேட்டோம். ''எங்கள் தொகுதி மதுரை மேற்கில் வருகிறது. மேற்குத் தொகுதி அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதி. எங்கள் அமைச்சர் மிகவும் அறிவானவர், திறமையானவர். அவரது தொகுதி மக்கள் நாங்கள் என்பதை அடையாளப்படுத்த தெர்மாகோலுடன் வந்துள்ளோம். எங்கள் அமைச்சர் சீனா பத்திரிகை வரை பிரபலமானவர். வைகை அணையைத் தூர்வாராமல் அதற்குப் பாதுகாப்பு கொடுப்பதுபோல் செல்லோடேப் மூலம் தெர்மாகோல்களை ஒட்டி மிகச்சிறந்த திட்டத்தை கொண்டுவந்து, எங்கள் தொகுதிக்கும் மதுரைக்கும் பெருமை சேர்த்தவர். இப்படிப்பட்ட வில்லேஜ் விஞ்ஞானியின் தொகுதி மக்கள் என்பதில் பெருமை கொண்டு காலரை தூக்கிவிடுகிறோம். எனவே, அப்பேற்பட்ட அமைச்சரின் பொதுமக்கள் நாங்கள் கஷ்டப்படலாமா. எனவே, எங்களுக்கு அடிப்படை வசதியை மாவட்ட ஆட்சியர் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்'' என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement