Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ஜ.க. துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இன்று தேர்வு!

பா.ஜ.க. துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இன்று தேர்வுசெய்யப்படுகிறார்.

துணைக் குடியரசுத் தலைவரை மோடி, அமித் ஷா தேர்வு செய்ய உள்ளனர்.

பரபரப்பான அரசியல் சூழலில், இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நாடு முழுக்க விருவிருப்பாக நடைபெற்றுவருகிறது. பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மீரா குமார், வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற மக்களவையில் அதிக பெரும்பான்மை பலம் இருப்பதால், ராம்நாத் கோவிந்த்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள்,  வரும் ஜூலை 20-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், இந்த மாதம் 4-ம் தேதி தொடங்கி, நாளையுடன் முடிவடைகிறது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக, கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை முடிவடைவதால், இன்று பா.ஜ.க. உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் கூடி, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 58 எம்பி-க்கள் பலத்துடன் காங்கிரஸ் கட்சி முதலிடத்திலும், பா.ஜ.க. 56 எம்பி-க்களுடன் 2-வது இடத்திலுள் உள்ளன. துணைக் குடியரசுத் தலைவராக வெற்றிபெறுபவரே, மாநிலங்களவையை வழிநடத்தும் தலைவராகவும் இருப்பார். இதனால், தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பலமான வேட்பாளரை நிறுத்தி, வெற்றிபெறும் முனைப்பில் பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது. குறிப்பாக, யாரும் எதிர்பாராத வகையில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தை தேர்வுசெய்ததுபோல, பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வுசெய்வார்கள் என அந்தக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement