தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு! 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கான 85 சதவிகித ஒதுக்கீட்டு அரசாணையை ரத்துசெய்ய  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இல்லாததால்,  தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். அவர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றம்


ஏற்கெனவே தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தின் அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாணவர்கள் தொடர்ந்த வழக்கு, நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் நீதிமன்ற வழக்குகளால், இந்த வாரம் தொடங்க இருந்த மருத்துவக் கவுன்சலிங், இன்னும் ஓரிரு வாரங்கள் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது.

மருத்துவக் கவுன்சலிங் நடத்திய பின்பே, கால்நடை மற்றும் மீன்வளப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெறும் என்று தள்ளிவைத்திருக்கிறார்கள். இதன்மூலம், எந்தப் படிப்பிலும் சேர முடியாமல் மாணவர்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!