கனடா பிரதமரை நெகிழ வைத்த சிரியா குழந்தை!

கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ,  கடந்த சனிக்கிழமையன்று தன் பெயர்கொண்ட சிரியக் குழந்தையைச் சந்தித்து மகிழ்ந்தார். சிரியாவில் நடைபெற்றுவரும் போரினால், சிரிய மக்கள் பலரும்  கனடா நாட்டுக்கு குடியேறிவருகின்றனர். 

இந்நிலையில், சிரியத் தம்பதியர் கனடா பிரதமருக்கு நன்றி செலுத்தும் வகையில்,  அவரது பெயரான ஜஸ்டின்  ட்ரூடோவை தங்கள் குழந்தைக்குச்  சூட்டியிருக்கின்றனர். கனடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ,  அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார்.  இதுகுறித்து அந்தக் குழந்தையின் தாய் கூறுகையில், “நாங்கள் பிரதமரைச் சந்தித்தோம் என்று என்னால்  நம்பவே  முடியவில்லை. அவர் எங்களிடம் உங்கள்  குழந்தைக்கு என் பெயரைச் சூட்டியதில் மகிழ்ச்சியடைக்கிறேன் என்று கூறினார்”, என்று உற்சாகம் பொங்கத் தெரிவித்தார். 

அந்தக் குழந்தையின் பெற்றோர், முகமது மற்றும் அஃப்ரா  பிலால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கனடா நாட்டில் குடியேறினர். கடந்த மே மாதம் 4-ம் தேதி பிறந்த தங்களின் குழந்தைக்கு,  ஜஸ்டின் ட்ரூடோ என்று பெயர் சூட்டினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!