'கடம்பன்' கைவிட்டதால், அண்ணாநகர் வீட்டை விற்ற ஆர்யா!

சினிமாவில் எதற்காக வந்தார்களோ அந்தத் தொழிலை மட்டும் செய்து வந்தாலே ஜெயிப்பது நிச்சயம். 'செல்லமே' படத்தில் அறிமுகமாகி  நடிகராக நடித்துக்கொண்டு இருந்தவரை விஷாலின் சினிமா வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. எப்போது சொந்தமாகத் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தாரோ அப்போது முதல் கந்துவட்டிக்காரர்கள் கண்காணிப்பிலேயே இப்போதுவரை வாழ்ந்து வருகிறார் விஷால்.    

 kadamban

ஆரம்பத்தில் ஆர்யாவும் நடிப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். பெரும்பாலான நடிகர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு, அந்தப் படத்துக்கான டப்பிங்பேசி கொடுப்பதற்கு முன்பே சம்பளமாகப் பேசிய மொத்த தொகையையும் செட்டில் செய்யச் சொல்லுவார்கள். ஒருவேளை தயாரிப்பாளர் பணத்தைத் தராவிட்டால் டப்பிங் பேசுவதற்கு வரவே மாட்டார்கள். அதுபோல ஆர்யாவை  ஒப்பந்தம் செய்த ஒருசில தயாரிப்பாளர்கள் பேசிய சம்பளத்தைத் தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு கைவிரித்து இருக்கிறார்கள். அப்போது எல்லாம் கறார் காட்டாமல் பல படங்களுக்குப் பணமே வாங்காமல் டப்பிங்பேசி கொடுத்து இருக்கிறார், ஆர்யா. 'மீகாமன்' படத்தைத் தயாரித்த ஜபக் அந்தப் படத்தை வெளியிட பணம் இல்லாமல் தவித்தபோது பைனான்ஷியர் ஒருவரிடம் சொந்தமாகப் பணம் வாங்கிக் கொடுத்து ரிலீஸ் செய்ய உதவினார்.

ஆர்யா சொந்தமாகப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்த பிறகு, பெரும் சிக்கலில் சிக்கிக்கொண்டார்.  எதிர்பார்த்த அளவுக்கு 'சேட்டை' திரைப்படம் ஜெயிக்காததால் சிரமத்துக்கு ஆளானார். இப்போது  சொந்தமாக 'கடம்பன்' படத்தைத் தயாரித்து, அந்தப் பட கேரக்டருக்காக ஹோம்-ஒர்க் செய்து உடல் எடையைக்கூட்டி சிரமப்பட்டு நடித்தார். அந்தப் படம் பெரிதாக பிசினஸ் ஆகாததால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார். அப்போது ஒரு பிரபல தயாரிப்பாளர் ரிலீஸ் செய்ய முன்வந்தார். 'உங்களோட 'கடம்பன்' ஜெயிச்சுட்டா ஒ.கே, தோத்து போயிட்டா என்ன பண்றது. முன்கூட்டியே உங்க அண்ணாநகர் வீட்டை என்பேர்ல எழுதிக் கொடுத்தா நானே 'கடம்பன்' படத்தை ரிலீஸ் செய்யறேன்' என்று சொல்ல வேறு வழியில்லாமல் அந்தத் தயாரிப்பாளரிடம் தன்னுடைய அண்ணாநகர்  வீட்டை முதலில் எழுதிக் கொடுத்தார், 'கடம்பன்' வணிகரீதியாக வெற்றி பெறாததால் இப்போது அந்தத் தயாரிப்பளரிடமே அண்ணாநகர் வீட்டை விற்றுவிட்டார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!