வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (17/07/2017)

கடைசி தொடர்பு:16:34 (17/07/2017)

லண்டனில் நடந்த 'டன்கிர்க்' பட ப்ரீமியர் நிகழ்ச்சியில் நோலன் நெகிழ்ச்சி!

'மொமென்டோ', 'இன்ஸெப்ஷன்', 'இன்டஸ்டெல்லார்', 'தி ப்ரெஸ்டீஜ்' போன்ற படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் வித்தியாசமான வேறு ஒரு ஜானரில் படம் எடுப்பதிலும் வல்லவர். அது எல்லாவித ரசிகர்களையும் திருப்திப்படுத்தும். இவரின் அடுத்த படைப்புகளுள் ஒன்று 'டன்கிர்க்'. உலகப் போரை மையமாக வைத்து  உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பிரீமியர் நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து இளவரசர் ஹாரி பங்கேற்றார். அதில் கிரிஸ்டோபர் நோலன் பேசியபோது 'இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே இதில்தான் சிறந்த படக்குழுவும், நடிகர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்' என்று ஒட்டுமொத்த படக்குழுவையும், நடிகர்களையும் பாராட்டியதோடு இல்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற 13 ராணுவ வீரர்களுக்கும் தனது மரியாதையைச் செலுத்திப் புகழ்ந்து பேசினார். 

டன்கிர்க் கிறிஸ்டோபர் நோலன்

படத்தில் படைத் தளபதியாக நடித்திருக்கும் கென்னத் ப்ரனாக் 'இது சாமானியர்களைப் பற்றிப் பேசும் படம்' என்று கூறினார். பல வகையான நவீன ரக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இந்தியாவில் வரும் 21-ம் தேதியன்று வெளியாக உள்ளது. இதற்கு முந்தைய நோலன் படங்களுக்கு இல்லாத வரவேற்பு இந்தப் படத்துக்கு இருக்கிறது. 'டன்கிர்க்' படத்தின் டிரெயிலரைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.