வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (17/07/2017)

கடைசி தொடர்பு:16:54 (17/07/2017)

ஜியோ வளர்ந்திருக்கிறதா... என்ன சொல்கிறது ட்ராய்?

ந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், கடந்த மே மாதத்துக்கான டெலிகாம் சப்ஸ்கிரிப்ஷன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், மிக வேகமாக வளரும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 4.25 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கடுத்தபடியாக, பி.எஸ்.என்.எல் 1.34 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 0.76 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

ஜியோ - TRAI Monthly Subcription Report

ட்ராய் வெளியிட்டுள்ள சந்தாதாரர்கள் அடிப்படையிலான பட்டியலிலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கடந்த மே மாதம் வரை, சுமார் 11.73 கோடி சந்தாதாரர்களுடன் ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்தபடியாக, சுமார் 5.33 கோடி சந்தாதாரர்களுடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், சுமார் 4.04 கோடி சந்தாதாரர்களுடன் வோடஃபோன் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஏப்ரல் மாதத்தில் சுமார் 28.43 கோடியாக இருந்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, மே மாத முடிவில், சுமார் 29.16 கோடியாக அதிகரித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க