வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (17/07/2017)

கடைசி தொடர்பு:16:44 (17/07/2017)

சித்திர வீணைக் கலைஞர் ரவிகிரணுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது

ரவிகிரண்

மிழக மியூசிக் அகாடமி சார்பாக சித்திர வீணைக் கலைஞர் ரவிகிரணுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை மேதையாக இசைத்துறையில் நுழைந்தவர் சித்திர வீணைக் கலைஞர் ரவிகிரண். இசை மீது கொண்ட தீரா காதல் மற்றும் ஈடுபாட்டால் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர். தமிழகம் மட்டுமன்றி,  இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இசைக் கச்சேரி நடத்தியவர். அதோடு, உலகின் பல நாடுகளிலும் பல்வேறு இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர். குருவாக இருந்து பலருக்கு முறையான கர்நாடக சங்கீத இசையைக் கற்றுத் தந்து வருகிறார். இவரது சீடர்கள் பலர் இவரது பெயரைச் சொல்லும் அளவுக்கு பல்வேறு தளங்களில் சிறப்பான இசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இசை உலகில் தனக்கென சிறப்பான இடத்தைக் கொண்டுள்ள ரவிகிரணுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது பொருத்தமான விஷயம் என இசைத்துறையில்  பலரும் புகழாராம் சூட்டியுள்ளனர். இவ்விருது இவருக்கு ஜனவரியில் வழங்கப்பட இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க