Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஸோம்பி படங்களின் தந்தை' என்று அழைக்கப்படும் ஜார்ஜ் ஏ.ரொமிரோ புற்று நோயால் மரணம்!

ஹாலிவுட்டில் தற்பொழுது ஸோம்பி படங்கள் தனி ஜானராகவே மாறிவிட்டது. ஹாலிவுட்டில் வெளியான ஸோம்பி படங்களில் இன்ஸ்பையராகி தமிழ் சினிமாவிலும் 'மிருதன்' போன்ற படங்கள் வெளி வரத் தொடங்கியுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் தந்தை என்று அழைப்படுபவர் ஜார்ஜ் ஏ. ரொமிரோ. இவர்தான் ஸோம்பிகளை மையமாக வைத்து முதன்முதலில் படம் இயக்கியவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த 'நைட் ஆஃப் தி லிவ்விங் டெத்' எனும் படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் அடித்தது. வசூல் ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதற்குப் பின் இவர் இயக்கிய 'டான் ஆஃப் தி டெட்', 'டே ஆஃப் தி டெட்', 'மார்டின்', 'தி க்ரீப் ஷோ' போன்ற பல படங்களில் ஸோம்பிகளையும், காட்டேரிகளையும் மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அதனாலேயே ஹாலிவுட் வட்டாரங்களில் 'ஸோம்பி படங்களின் தந்தை' என்று மரியாதையோடு அழைக்கப்பட்டார். 

ஜார்ஜ் ஏ.ரொமிரோ

புற்றுநோய் காரணமாக ஜார்ஜ் ஏ. ரொமிரோ, டாரன்டோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி தன்னுடைய 77 வயதில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close