Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வு அறிக்கையை ஆகஸ்ட் 7-ல் தாக்கல் செய்ய மதுரைக் கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடந்த 4 கட்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடவும் மீண்டும் முழுமையான அகழாய்வு நடத்தவும் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். காமராசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆய்வறிக்கையை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தாக்கல் செய்யக்கோரி இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

எழுத்தாளர் காமராசுவிடம் பேசினோம், ''திருநெல்வேலி - ஸ்ரீ வைகுண்டம் செல்லும் சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது ஆதிச்சநல்லூர். இதிலிருந்து 15 கி.மீ தொலைவில் பாண்டிய நாட்டின் தலைநகரமான கொற்கை அமைந்துள்ளது. 'உலக நாகரித்தின் தொட்டில்' என ஆதிச்சநல்லூர் அழைக்கப்படுகிறது ஹரப்பா, மொகஞ்சதாரோவை ஆய்வு செய்த வங்கதேசத்து அறிஞரான பானர்ஜியே இவற்றுக்கு முன்னோடியாக விளங்கிய நாகரிகம் தென்கோடிதான், அதுவும் ஆதிச்சநல்லூர் நாகரிகம்தான் எனக் கூறியுள்ளார். இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள் மெசபடோமியா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆதிச்சநல்லூரில் கடந்த 2004 பிப்ரவரியில் நடந்த அகழாய்வில் 115 ஏக்கர் பரப்பளவில் தொன்மையான இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து பல முதுமக்கள் தாழிகள், பழங்காலப் பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இப்பகுதியில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த ஆய்வுகள் குறித்து இதுவரை தொல்லியல்துறை எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்கள் சென்னையிலும் வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே, ஆதிச்சநல்லூரில் மீண்டும் முழுமையாக அகழாய்வு பணி நடத்திடவும், இதுவரை செய்த அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், இங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்கள், முதுமக்கள் தாழிகளை அருங்காட்சியகம் அமைத்து மக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்திட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளேன்'' என்றார்.

காமராசுவின் இந்த மனு இன்று காலை மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அகழாய்வு பணிகள் பற்றிய முழு அறிக்கையை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தாக்கல் செய்யக்கோரி இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement