Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடையை எதிர்த்து மேல் முறையீடு!

டி.டி.வி.தினகரன் மீதான மோசடி வழக்கு விசாரணைக்குத் தடை விதித்ததை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 


1996-ம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், இரண்டு வழக்குகளிலிருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரியும், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கத் தடை கோரியும் டி.டி.வி.தினகரன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டி.டி.வி.தினகரன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இன்று அமலாக்கப்பிரிவு உயர் நீதிமன்றத்தில் இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், " 21 ஆண்டு கால வழக்கில் தினகரனின் ஒப்புதலுடன்தான் குற்றச்சாட்டு பதிவு நடைபெற்று வந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் இந்த வழக்கு விசாரணை பின்னோக்கிச் செல்லவதற்கு வாய்ப்பு அதிகம்" என்று  கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்பை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement