Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நாடகத்தில் உலகப்புகழ் பெற்ற சிங்கர் எட் ஷீரன்!

பொதுவாக ஆங்கிலத் தொடர்களுக்கு தமிழ்நாட்டிலும் மிகுந்த அளவில் வரவேற்பு காணப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' எனும் நாடகத்துக்கு வெறித்தனமான ரசிகர்களை இங்குக் காணமுடியும். இதுவரை ஆறு சீஸன்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று ஏழாவது சீஸனில் முதல் எபிசோட் வெளியாகி இருக்கிறது. ஃபேஸ்புக் முழுவதும் 'வாட்சிங் கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்ற ஸ்டேட்டஸ் அனல் பறக்கிறது. அந்த நாடகத்தில் உலகப்புகழ் பெற்ற சிங்கர்களுள் ஒருவரான எட் ஷீரன் இந்த நாடகத்தில் இடம்பெற்றுள்ளார். அவர் பாடிய 'தி ஷேப் ஆஃப் யூ' எனும் ஆங்கிலப் பாடல் இளைஞர்கள் ப்ளே லிஸ்ட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். யூ-ட்யூபில் 1.8 பில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.

எட் ஷீரன்

இந்நிலையில், இன்று வெளியான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ் - ட்ராக்ஸ்டோன்' எனும் எபிசோடில் எட் ஷீரன் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். அதில் வரும் கதாபாத்திரங்களுள் ஒருவரான ஆர்யா ஸ்டார்க் குதிரையில் சவாரி செய்துகொண்டிருப்பார். அப்பொழுது படை வீரர்களுள் ஒருவராக எட் ஷீரனும் இடம்பெற்றிருப்பார். அவர் குரலில் குட்டியாக ஒரு பாடலும் பாடியிருப்பார்.  ஷூட்டிங் சமயத்தில் அவர் பாடியதைக் கேட்டு அந்த சீரியலில் வரும் ஆர்யா ஸ்டார்க் என்று அழைக்கப்படும் மைஸி வில்லியம்ஸ் அவரைப் புகழ்ந்து தள்ளினாராம்.

எட் ஷீரன் இடம்பெற்ற காட்சி!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close