Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடன் தொல்லைத் தாங்காமல் இரண்டு குழந்தைகளைக் கிணற்றுக்குள் தூக்கிவீசிய தாய்!

கடன் தொல்லை தாங்க முடியாமல் இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதில் துர்திஷ்டமாக இரண்டு குழந்தைகள் இறந்துபோகவே கிராமமே சோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது.

கடலூர் மாவட்டம், கோதண்டராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் - சாய்பாபு தம்பதியர். இவர்களுக்கு கோகுல், கோஷன்ப்ரியன் என்று ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு வெங்கடேசன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனார். இதனால் குடும்பத்துக்கு வருமானம் இல்லாததால் மகன்களைப் படிக்க வைக்கவும் குடும்பச் செலவுக்கு வழியில்லாமலும் வறுமையில் தவித்து வந்தார் சாய்பாபு. இந்நிலையில், குழந்தைகள் படிப்புச் செலவுக்காகச் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறுகச் சிறுக இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கிராமத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால் வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாமல் தவித்து வந்தார். வாங்கிய கடனை கட்டச் சொல்லி சுய உதவி குழுக்கள் சாய்பாபுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், திம்மராவுத்தன்குப்பம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய் தங்கியிருந்தார். அங்கேயும் சென்று சுய உதவிக் குழுக்கள் சாய்பாபுவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதனால் மண உளைச்சலான சாய்பாபு, "வாங்க, கிணற்று பக்கம் போய்க் குளித்துவிட்டு வரலாம்" என்று தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கூட்டிகிட்டு அக்கிராமத்திலுள்ள தர்மதுரைக்குச் சொந்தமான கிணற்றுக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார் சாய்பாபு. இதில் சாய்பாபுவை மட்டும் கிராம மக்கள் காப்பாற்றியுள்ளனர். ஆனால் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து குள்ளஞ்சாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சாய்பாபுவிடம் விசாரணை செய்துவருகின்றனர்.
                

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close