Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உதய் மின் திட்டத்தால் கடன்சுமைதான் அதிகரிக்கும்...': முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு!

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு நிதி மிச்சமாகும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதை, தமிழ்நாடு மின் ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் விஜயன் மறுத்துள்ளார்.

udhay scheme
 

கடந்த ஜனவரி மாதம் தமிழகம், மத்திய அரசின் உதய்மின் திட்டத்தில் அதிகாரபூர்வமாக இணைந்தது. இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், தமிழக மின்துறை துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் டெல்லியில் நடந்தது. 


தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய அரசின் மின்திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்ய அண்மையில் சென்னை வந்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் “ஜிஎஸ்டி வரிவிதிப்பால் என்.எல்.சி-க்கு ரூ.508 கோடி செலவு குறைந்துள்ளது. அதாவது, நிலக்கரி கொள்முதல் விலை குறைந்துள்ளது. உதய் மின்திட்டம் மூலம் தமிழ்நாட்டுக்கு நிதி மிச்சமாகும். தமிழகத்தில் மின்சாரத் துறை வளர்ச்சி அடையும்” என்று குறிப்பிட்டுப் பேசினார். 

Vijayan

இதுகுறித்து  தமிழ்நாடு மின் ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் விஜயன் கூறுகையில் ‘உதய் மின் திட்டம் என்பது மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான சதி.  2011-ம் ஆண்டுக்குப் பிறகு  57% வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.  உதய் மின் திட்டத்தில் தமிழகம் இணைந்ததன் மூலமாக மேலும் மின் கட்டணம் உயரும் நிலை உருவாகியுள்ளது. உதய் மின் திட்டத்தால் அரசுக்கு செலவு மிச்சம் என்பதில் உண்மையில்லை.  கடன் சுமைதான் அதிகரிக்கும். தமிழக அரசின் டான் ஜெட்கோ வெளியிட்டுள்ள பேலன்ஸ் ஷீட்டில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றன. அந்த  பேலன்ஸ் ஷீட்டில் (இருப்புநிலை) குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் உண்மையில்லை. மேலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் என்.எல்.சி-க்குச் செலவு குறைந்துள்ளது என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார், நிலக்கரி கொள்முதல் விலை குறைந்தாலும் உபகரண செலவுகள், விநியோக செலவுகள் என ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், எந்த மாற்றமும் இருக்காது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் என்.எல்.சிக்குச் செலவு குறைந்திருப்பதாக கூறுவது நம்பும்படி இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close