மலையாள சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் தனுஷ்..! | Dhanush enters Malluwood as Producer

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (17/07/2017)

கடைசி தொடர்பு:19:24 (17/07/2017)

மலையாள சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் தனுஷ்..!

கோலிவுட்டிலிருந்து பாலிவுட், ஹாலிவுட் எனப் பெரிய ரவுண்டு அடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், மல்லுவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்தமுறை நடிகராக அல்ல, தயாரிப்பாளராக.

தனுஷ்

'என்னு நிண்டே மொய்தீன்', 'சார்லி', 'ஒரு மெக்சிகன் அபரதா' ஆகிய திரைப்படங்களில் நடித்த டோவினோ தாமஸ் நடிக்கும் `தரங்கம்' திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தச் செய்தி கேரளாவிலுள்ள தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது, தனுஷ் மற்றொரு மலையாளப் படத்தையும் தயாரிக்கத் திட்டமிட, அதிலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார் டோவினோ. இந்தப் படத்துக்கு பிரபல அர்ஜென்டினா கால்பந்து வீரரான `மாரடோனா'வின் பெயரை வைத்துள்ளனர். 'அங்கமாலி டைரிஸ்' படத்தில் நடித்த டிட்டோ வில்சன், கிச்சு வர்கி, நிஸ்தார் அகமத், செம்பன் வினோத், ஜின்ஸி பாஸ்கர் போன்றோர் இந்தப் படத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்கள்.  சரண்யா நாயரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்யும், சுஷின் ஸ்யாம் இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்கவிருப்பது விஷ்ணு நாராயணன் என்னும் அறிமுக இயக்குநர். அப்போ தனுஷை சீக்கிரமே டோலிவுட்டிலும் எதிர்பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க