வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (17/07/2017)

கடைசி தொடர்பு:21:37 (17/07/2017)

மத்தியப்பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த வக்கீலுக்கு தர்மஅடி கொடுத்த பெண்கள்

 

 

த்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் கோர்ட் வளாகத்துக்குள் பாலியல் சீண்டல் செய்த வக்கீலுக்கு பெண்கள் தர்மஅடி கொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிபவர் மகேந்திர லோடி. கோர்ட் வளாகத்துக்குள் இருந்த பெண்களிடம் பாலியல்ரீதியாக பார்ப்பது, சீண்டல்கள் செய்வது என தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். வக்கீலின் தொடர்ந்த பாலியல் சீண்டலால் ஆத்திரமடைந்த பெண்கள் கோர்ட் வளாகத்துக்குள்ளேயே மகேந்திர லோடியை செருப்பைக் கழற்றி விரட்டி, விரட்டி அடித்துள்ளனர். மகேந்திர லோடி ஓட, ஓட விடாமல் பெண்கள் விரட்டித் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மகேந்திர லோடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோர்ட் வளாகத்துக்குள் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வக்கீலின் செயல்களைக்கண்டு மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பார் கவுன்சில் வக்கீல் மகேந்திர லோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க