Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வால் பாதிப்பு: குடியரசுத் தலைவருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மாணவர்கள்!

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்து, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள், இதில் கலந்துகொண்டனர். நீட் தேர்வால் தங்களது மருத்துவப் படிப்பு வாய்ப்பு எப்படியெல்லாம், பறிபோனது என்பது பற்றி விளக்கமாக தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசின் இந்த முடிவால் மாணவர்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியும் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களைச் சந்தித்து தங்களது கோரிக்கைக்கு ஆதரவு திரட்டவும் முடிவெடுத்தனர்.

நீட் பத்திரிகையாளர் சந்திப்பு

அதன்படி, இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களான தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் ஆகியோரைச் சந்தித்தும் தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினர். மேலும் தி.மு.க வின் செயல்தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து, அவர்கள் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர். அப்போது, நீட் தேர்வு குறித்து குடியரசுத் தலைவருக்கு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் ரத்தத்தால் எழுதிய கடிதத்தை ஸ்டாலினிடம் வழங்கினர். "பொதுவான பாடத்திட்டம் இல்லாமல் பொதுவான தேர்வு வைப்பது அநீதி" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைரைச் சந்தித்து இது குறித்து பேசுவதாக ஸ்டாலின் கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close