குல்பூ‌ஷன் ஜாதவ் கருணை மனு; பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு

இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவ், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். ஈரான் வழியாக பாகிஸ்தானின் பலுசிஸ்தானுக்கு வந்து, உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது  குற்றம் சாட்டியது பாகிஸ்தான். இதையடுத்து, ஜாதவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ராணுவ மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இருப்பினும், இந்தியாவின் முறையீட்டின்பேரில், மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. 

குல்பூஷன்
 

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீது பஜ்வாவிடம் குல்பூ‌ஷன் ஜாதவ் கருணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் நிலை குறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் காபூர்  கூறுகையில், ''குல்பூ‌ஷன் ஜாதவ் கருணை மனு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவரது மனுவை ராணுவ தளபதி பரிசீலித்து வருகிறார். ஜாதவுக்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறார். தகுதி அடிப்படையில், மனு மீது இறுதி முடிவு எடுப்பார்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!