Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கதிராமங்கலம் பிரச்னை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!'- பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

கதிராமங்கலம் பிரச்னை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்கிறார் பழ.நெடுமாறன்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்ட பேராசியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பல்வேறு அமைப்பினரும், தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். கூடவே கதிராமங்கலம் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், கைது செய்யப்பட்டவர்களை நேரில் சந்தித்தார்.

 

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,

கதிராமங்கலத்தில் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தனெழுச்சியாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களைத் தூண்டியதாக 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 10 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

கதிராமங்கலம் கிராம மக்கள் எண்ணெய் கசிவினால் தங்கள் நிலங்கள் பாழ்பட்டதைக் கண்டித்து அறவழிப் போராட்டம் நடத்தினர். போராடிய மக்களை மாவட்ட ஆட்சியர் உடனடியாக சந்தித்திருந்தால் பிரச்னைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. அமைதியாகப் போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை நியாயப்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது. தற்போது போராடும் மக்களை அச்சுறுத்தும் விதமாக கதிராமங்கலத்திற்குள் செல்பவர்களை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கதிராமங்கலம் என்ன காஷ்மீரைப் போன்றா உள்ளது. கதிராமங்கலத்தில் உள்ள காவல்துறையினரை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் அங்கு பெரும் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகும்.

ஓ.என்.ஜி.சி நிறுவனம், தரமற்ற பழைய குழாய்களைப் பயன்படுத்தியதால்தான் பதிக்கப்பட்ட குழாய்களில் கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாழாய் போயிருக்கிறது. அங்குள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் எனக் கூறி வருகிறார்.அப்படியென்றால் சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதுதானே? அப்படிச் செய்தால்தான் முதல்வர் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close