Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கைய நாயுடு: அ.தி.மு.க இரு அணிகளின் நிலை என்ன?

வெங்கையா நாயுடு

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், அடுத்த துணை ஜனாதிபதிக்கான வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காந்தியின் பேரன், கோபால கிருஷ்ண காந்தியை முன்நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று ஆளும் பா.ஜ.க., துணை ஜனாதிபதிக்கான வேட்பாளாராக வெங்கைய நாயுடுவை அறிவித்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கைய நாயுடு தற்போது மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரை ஆதரிக்கக்கோரி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். ஓ.பன்னீர்செல்வமும்  தனது அணியின் ஆதரவை வெங்கைய நாயுடுக்கு அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார். அ.தி.மு.க ஓர் அணி பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியிடமும் பிரதமர் பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக அ.தி.மு.க மற்றொரு அணியும் வெங்கைய நாயுடுக்கு ஆதரவளிக்கும் என்றே பேச்சு அடிபடுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close