Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் காணாமல் போன மாணவிகள் சென்னையில் மீட்பு!

திருச்சியில் காணாமல் போன நான்கு மாணவிகள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் நேற்று இரவு பள்ளி மாணவிகள் நான்கு பேர் காணவில்லை எனத் தகவல் பரவ அப்பகுதியே பதற்றம் ஆனது. போலீஸார் விசாரணையில் நேற்று இரவு 8 மணியளவில், ஜெராக்ஸ் எடுக்க செல்வதாகக் கூறி, வீட்டைவிட்டுச் சென்ற யாஸ்மின், சர்மிளா பானு, நஷ்ரின் உள்ளிட்ட 4 மாணவிகள் மீண்டும் வீடு திரும்பவும் இல்லை. உறவினர்கள், நண்பர்கள் பலரும் திருச்சி முழுக்க மாணவிகளைத் தேடினர். அவர்கள் குறித்த தகவல்கள் இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் பரவின. இது பலப்பகுதிகளிலும் பரபரப்பை உண்டாக்கியது.

விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டையில் மாணவிகள் கிடைக்காத நிலையில் பதற்றம் கூடியது. இந்நிலையில் காணாமல் போன மாணவிகள் சற்று முன் சென்னையில் மீட்கப்பட்டதாக திருச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர். மாணவிகள் காணாமல் போனது குறித்தும், அவர்கள் சென்னை சென்றது குறித்தும் போலீஸார் விசாரித்தனர். அப்போது, நான்கு பேரும் சென்னையைச் சுற்றிப்பார்க்க வந்தது தெரியவந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close