Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நுகர்வோர் பொருள்களைத் தொடர்ந்து உட்கட்டமைப்பு: பதஞ்சலியின் அடுத்த அதிரடி?

பதஞ்சலி என்ற நிறுவனத்தின் மூலம் வேகமாக நுகரப்படும் நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் யோகா குரு பாபா ராம் தேவ் அடுத்ததாக உட்கட்டமைப்புத் துறையில் இறங்கப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பதஞ்சலி

யோகா, ஆயுர்வேதம் எனச் செயல்பட்டுவந்த பாபா ராம் தேவ், தனது நண்பர் பாலகிருஷ்ண ஆச்சார்யாவுடன் இணைந்து பதஞ்சலி நிறுவனத்தை ஆரம்பித்து பிசினஸ் செய்து வருகிறார். பதஞ்சலி பொருள்கள் இன்று நாடு முழுவதும் அமோக வரவேற்பைப் பெற்று விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில் நிறுவனங்கள் சிலவற்றையும் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பதஞ்சலி நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ.10,561 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் வெறும் ரூ.2,006 கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஏற்கெனவே பிசினஸில் தொய்வடைந்து கடனில் திளைக்கும் சில உட்கட்டமைப்பு நிறுவனங்கள் பதஞ்சலி நிறுவனத்தை அணுகியுள்ளன. தங்களை நஷ்டத்திலிருந்து பாதுகாக்கும் ஆபத்பாந்தவனாக பதஞ்சலியை அவர்கள் நினைக்கிறார்கள். இதற்குப் பதிலளித்த பாபா ராம் தேவ், "ஏற்கெனவே பதஞ்சலி கல்வி, மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வருகிறது. பிற துறை நிறுவனங்களுக்கு உதவவும் பதஞ்சலி தயாராக இருக்கிறது. ஆனால், அவை பதஞ்சலியின் சுதேசி கொள்கையின்படி செயல்பட தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதன்மூலம் பதஞ்சலி அனைத்து துறைகளிலும் கால்பதிக்க வாய்ப்பிருக்கிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close