Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெற்கே நீட் சிக்கல்...வடக்கே ஜோதிட மருத்துவம்...கேள்விக்குறியாகும் மருத்துவத்தின் எதிர்காலம்!

நீட் மற்றும் ஜோதிட மருத்துவம்

'நீட்' தேர்வு எழுதியும் மருத்துவச் சீட் கிடைக்குமா... கிடைக்காதா என்கிற திண்டாட்டத்தில், தெற்கே மாணவர்கள் போராடிவரும் இதே சூழலில்தான் வடக்கே மத்தியப்பிரதேச அரசு ஒரு புதிய செயல்திட்டத்தை அறிவித்துள்ளது. ''மாநில அரசின் மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவில்... இனிமேல் ஜோதிட மருத்துவமும் ஒரு துறையாக இருக்கும்'' என்று அறிவித்துள்ளார் அந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான். ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள்! ‘ஜோதிட மருத்துவம்’. இது வரும் செப்டம்பர் முதல் அங்கே நடைமுறைக்கு வரவிருக்கிறது. வழக்கமாகச் சிறிய அளவிலான சளி, இருமல் முதல் பெரிய அளவிலான கேன்சர் நோய்வரை தங்களது சிகிச்சைக்காக மருத்துவர்களைப் பார்க்க வருபவர்கள், இனி அங்கே இருக்கும் ஜோதிடர்களிடம் தங்களது ஜாதகத்தைக் கொடுத்து நோய் எதனால் உருவானது, நோய் எப்போது குணமாகும் உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். ஜாதகம் இல்லையென்றாலும் பரவாயில்லை. 'பிரசாந்தி குண்டலினி' என்னும் முறை வழியாக நோயாளி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்காக ஜோதிடம் பார்க்கவரும் நோயாளிகள், ஐந்து ரூபாய் பணம் செலுத்தவேண்டும். 

அதுமட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளில் எப்படிச் சீனியர் மருத்துவர்கள் ஜூனியர் மருத்துவர்களைப் பயிற்றுவிப்பார்களோ... அதேபோல இங்கே பணியமர்த்தப்படும் சீனியர் ஜோதிடர்கள் ஜூனியர் ஜோதிடர்களைப் பயிற்றுவிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

எளிய மக்களின் உயிரோடு விளையாடும் மோசடியான செயல்

இதுபற்றிக் கருத்து கூறியுள்ள எழுத்தாளர் மதிமாறன், ''மாணவர்களுடைய தகுதியை உறுதிப்படுத்தவே 'நீட்' என்னும் மதிமாறன்மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வு முறையை மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசு அமலுக்குக் கொண்டுவந்தது. தற்போது மத்தியப்பிரதேசத்தில் ஆளும் அதே கட்சிதான் மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றும் விதமாகச் சற்றும் தொடர்பில்லாத ஜோதிடர்களை நியமித்துள்ளது. வேதகாலத்தில், 'ஆயுர்வேதம்' என்னும் இந்திய மருத்துவமுறை மட்டுமே ஜோதிடத்துடன் தொடர்புடையதாக இருந்துவந்தது. தற்போது அந்த மருத்துவமுறைகூட, ஜோதிடத்துடன் இணைந்து இயங்கவில்லை. இந்தச் சூழலில், முழுவதும் மருத்துவ அறிவியல் சார்ந்து இயங்கும் தற்கால மருத்துவ முறையில் ஜோதிடத்தைப் பொருத்துவது எளிய மக்களின் உயிரோடு விளையாடும் மிக மோசடியான செயல். யுனானி, சித்தா போன்ற இந்திய மருத்துவ முறைகள் இங்கு பெரிய அளவில் சென்று சேராமல் போனதற்குக் காரணம், அவை ஒருகட்டத்துக்கு மேல் தங்களது மதம்சார்ந்து இயங்கத் தொடங்கியதால்தான். அம்மைக்கும் பிளேகு நோய்க்கும் கடவுள் காரணமாக இருக்கும் என்று மக்கள் பெரிதும் நம்பியிருந்த காலத்தில்தான், அம்மைக்கான தடுப்பூசி போடுதலையும், பிளேகுக்குக் காரணமான எலிகளைக் கொல்வதையும் பிரிட்டிஷ் கையில் எடுத்தது. நவீன மருத்துவத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், அது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்து இயங்கியதால் மட்டுமே. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைப்பது ஐநூறு ஆண்டுகளுக்கு நம்மைப் பின்தள்ளும்” என்றார்.

உண்மைதான்! 'ஆட்டோவின் கண்ணாடியைத் திருப்பினால் வண்டி ஓடும்' என்று நம்புகிற கதைதான். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement