வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (18/07/2017)

கடைசி தொடர்பு:12:09 (18/07/2017)

ரயில் நிலையத்தில் காவலரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய வாலிபர்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயலும்போது தவறி விழுந்தவர்,  காவலர் ஒருவரின் சாமர்த்தியத்தால் காப்பாற்றப்பட்டார். 


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று சென்னை -தாதர் இடையே இயக்கப்படும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படத் தயாரானது. அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏற முயன்றார். 

அப்போது தவறி விழுந்த அந்த இளைஞர் ரயில் வண்டிக்கும், நடைமேடைக்கும் நடுவில் மாட்டி கொண்டார். ரயில் ஓடத் தொடங்கியதால் அந்த இளைஞரையும் இழுத்துச் சென்றது. அப்போது அதே நடைமேடையில் பணியில் இருந்த காவலர் ஒருவர் விரைவாகச் செயல்பட்டு, வேகமாக அந்த இளைஞரை வெளியே எடுத்தார். இதனால் அந்த இளைஞர் சிறு காயம் கூட இல்லாமல் தப்பித்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகி உள்ளன. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க