Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனத் தாக்குதலில் 158 இந்திய வீரர்கள் பலியானதாக வதந்தி பரப்பும் 'டான்'!

சிக்கிம் எல்லையில் சீனா நடத்திய ராக்கெட் தாக்குதலில், 158 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக பாகிஸ்தானின் 'டான்' தொலைக்காட்சி வதந்தி பரப்பி வருகிறது. 

போலிச் செய்தியை பரப்பும் டான்

இந்திய, சீன எல்லையில் சிக்கிமை ஒட்டியுள்ள பூடானின் டோக்லா பகுதியில் சீனப் படையினரின் சாலை அமைக்கும் பணியால், இந்திய- சீனத் துருப்புகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் பாகிஸ்தானின் 'டான்' உள்ளிட்ட மீடியாக்கள் இந்தியாவுக்கு எதிராக விஷமச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எல்லைப் பகுதியில் சீனா நடத்திய ராக்கெட் தாக்குதலில், 158 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

துனியா நியூஸ் டி.வி என்ற தொலைக்காட்சியும் போலிக் காட்சிகள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்பியது. தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் உடல்களைக் கொண்டுசெல்வது போலவும் காயமடைந்தவர்களைத் தூக்கிச் செல்வது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன. ட்விட்டரில், 'ஆஹா... டானுக்கு உள்ள சோர்ஸ் அற்புதம்' என சிலர் கேலி செய்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைப் பாகிஸ்தான் மீடியாக்கள் பரவ விட்டு வருகின்றன. அந்நாட்டு ராணுவத்தின் உத்தரவையடுத்து இதுபோன்ற போலிச் செய்திகளைப் பாகிஸ்தான் மீடியாக்கள் பரப்புகின்றன. மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close