பிக்பாஸ் பார்த்து காய்ச்சலில் பரிதவித்த பரணியின் அம்மா..!

கடந்த 15-ம் தேதி இரவு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கேட்ட கேள்விகளுக்குப் பரணி அளித்த பதில்கள் பெருத்த கரகோஷத்தைப் பெற்றது. குறிப்பாக 'யார் உங்களை டார்ச்சர் செய்தார்கள்' என்று கமல் கேள்வி கேட்க, 'யார் என்னை டார்ச்சர் செய்யலை என்று  பரணி சொன்ன  பதில் டச்சோ டச். பிக் பாஸ் இடத்தைவிட்டு வெளியேறிய பரணி என்ன செய்தார் என்பது குறித்து அவருக்கு நெருக்கமானவரிடம் விசாரித்தோம்.

"முதலில் ரெசார்ட்டை விட்டு வெளியில்வந்த பரணியை பத்திரமான பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டது விஜய் டிவி. சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஃப்ளாட்டில் மனைவியோடு வசித்துவரும் வீட்டுக்குப் பரணியை அனுப்பி வைத்தால் மீடியாக்கள் சூழ்ந்து கொண்டு பிக் பாஸ் குறித்து கேள்வி கேட்டுத் துளைத்து விடுவார்கள் என்று பத்திரிகையாளர்களுக்குத் தெரியாத இடத்தில் அனுப்பிவைக்க திட்டமிட்டனர். பரணியின் மாமியார், மாமனார் வசித்துவரும் வீடு  மாதவரத்தில் இருக்கிறது. அங்கே பிக் பாஸுக்குச் சொந்தமான காரில் மாமனார் வீட்டுக்குப் பரணியை அனுப்பி வைத்தது விஜய் டிவி.  பரணி என்ன ஆனார் என்கிற பதைபதைப்போடு மாமனார், மாமியார், மனைவி ஆகியோர் உணர்ச்சிப் பெருக்கோடு காத்து இருந்தனர் . அப்போது திடீரென மாமியார் வீட்டுக்குள் நுழைந்த பரணியைப் பார்த்து அவரைக் கண்ணீரால் குளிப்பாட்டி இருக்கிறார் மனைவி. பரணியின் மாமனார், மாமியார் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணி சகநண்பர்களோடு மல்லுக்கட்டுவதையும், கண்கள் கலங்கி காம்பவுண்ட் சுவர்ஏறி வெளியேறி முயற்சித்தக் காட்சியையும் பார்த்துக் கொண்டு இருந்த பரணியின் அம்மாவும், தங்கையும் டென்ஷன் தாங்கமுடியாமல் காய்ச்சலில் பரிதவித்துள்ளனர். இந்த விஷயம் பரணியிடம் அவரது மனைவி தெரிவிக்க உடனே மதுரைக்கு போன்செய்து அம்மாவுக்கும், தங்கைக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்.  ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டபடி முருக பக்தரான பரணி மறுநாள் அதிகாலை எழுந்து தனது மனைவி, குழந்தை, மாமனார், மாமியாரோடு சியாபுரி முருகன் கோயிலுக்குச் சென்று முருகக் கடவுளை வழிபட்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகிறவர்கள் 100 நாள்களுக்கு பிக் பாஸ் குறித்து எந்தவிதக் கருத்துக் கூறக்கூடாது என்று விதிமுறை வைத்து இருக்கிறதாம் விஜய் டிவி. ஆகவே, சென்னையில் இருந்தால் யாராவது வாயைக்கிளறி வாழ்க்கையைக் கெடுத்துவிடுவார்கள் என்று அஞ்சிய பரணி தனது அம்மா, தங்கை குடும்பத்தினரைப் பார்க்க மதுரைக்கு காரில் சென்று விட்டார். கடந்த 15-ம் தேதி நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமல் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக சென்னைக்கு வந்து பங்கேற்று இருக்கிறார்" என்று நம்மிடம் பதில் சொன்னார் பரணிக்கு நெருக்கமானவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!