Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஃப்கன் மாணவிகளின் ரோபோடிக்ஸ் கனவு நனவானது!

அமெரிக்காவில் நடந்து வரும் ரோபோடிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள போராடி வந்த ஆஃப்கன் மாணவிகளின் ரோபோடிக் கனவு நனவாகியுள்ளது.

Robotics afghan girls

உலகின் பல நாடுகளையும் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் ரோபோடிக்ஸ் போட்டி வாஷிங்டனில் நேற்று 17-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்காக இப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஆஃப்கன் மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆஃப்கன் மாணவிகளின் அமெரிக்கப் பயணத்துக்கான விசா வழங்கப்படவில்லை. இம்மாணவிகள் அமெரிக்காவுக்குள் வருவதுக்குத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. ரோபோடிக் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்த மாணவிகள் இதற்காகத் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கடுமையான விசா கட்டுப்பாடுகள் இதற்குக் காரணமாக உள்ளது. ஆஃப்கன் மாணவிகள் வாஷிங்டனில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நெருக்கடி நிலை குறித்து உலகளவில் சர்ச்சைகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கடுமையான விசா கட்டுப்பாடுகளே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. அதே டொனால்ட் ட்ரம்ப் ஆஃப்கன் மாணவிகள் விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு அவர்களுக்கு விசா கிடைக்க ஏற்பாடுகள் செய்தார். இதையடுத்து, பல்வேறு தடைகளைத் தாண்டி ஆஃப்கன் மாணவிகள் அமெரிக்கா வந்தனர். ரோபோடிக் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளனர். இது ஆஃப்கானிஸ்தான் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் நிகழ்வாக மாறியுள்ளது. ஆஃப்கன் மாணவிகளின் கனவு நனவாகியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close