’அரசாங்கம் தொழில் செய்யவிடாமல் கழுத்தைப் பிடிக்குது’... பேப்பர் ப்ளக்ஸ் உரிமையாளர்கள் கதறல்! | Banner printing press employees protest against Tamilnadu goverment

வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (18/07/2017)

கடைசி தொடர்பு:13:39 (18/07/2017)

’அரசாங்கம் தொழில் செய்யவிடாமல் கழுத்தைப் பிடிக்குது’... பேப்பர் ப்ளக்ஸ் உரிமையாளர்கள் கதறல்!

’எங்கள் தொழில் கடந்த ஆறு மாதங்களாக முடங்கி போய்கிடக்கிறது. வங்கியில் வாங்கிய கடனைக்கூட எங்களால் கட்ட முடியவில்லை. போலீஸும் மாவட்ட நிர்வாகமும் எங்களைக் கழுத்துப்பிடியாகப் பிடிக்கிறது ஆகையால் அந்தப் பிடியில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சிவகங்கை மாவட்ட அச்சகம் பேப்பர் ப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டிருக்கிறார்கள்.


   

அச்சகம் பேப்பர் ப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனியப்பன் பேசும் போது ”சிவகங்கை மாவட்டத்தில் ஐம்பது ‘ப்ளக்ஸ்’ யூனிட் இருக்கிறது. ஒவ்வொரு யூனிட்டும் முப்பது லட்சம் மதிப்பிலானது. ப்ளக்ஸ் அடிக்கிறதுக்குப் பதினைந்து நாள்களுக்கு முன்னதாகவே அனுமதி வாங்கனும்னு போலீஸ் சொல்லுறாங்க.  ப்ளக்ஸ் வைக்ககூடாதுனு  உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கு இதுயெல்லாம் சரி.. நல்ல விசயம் நாங்க ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒரு சந்துக்குள்ள கல்யாணம் மண்டபம் பிடிச்சு ஏழைகள் நடத்தும் கல்யாணத்துக்கு எப்படி பதினைந்து நாள்களுக்கு முன்னாடி போலீஸ் தாசில்தார் டி.ஆர்.ஓனு அனுமதி வாங்க முடியும். அப்படி அனுமதி வாங்க நாங்க காரைக்குடியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரம் வரணும் இது சாத்தியமா? பெரிய அரசியல் கட்சிகள் நடத்துற கூட்டம் மாநாடுக்கு இப்படிபண்ணலாம்.

protest

 

இந்தத் தொழில் செய்றவுங்க எல்லாமே இளைஞர்கள்தான். அரசாங்கமே கடன்கொடுக்குது. மானியம் கொடுக்குது. அரசாங்கமே எங்கள தொழில் செய்யமுடியாமல் கழுத்தையும் பிடிக்குது. இதுனாலயே நாங்க பேங்க்ல வாங்குன தவணையைக் கட்டமுடியல. மாவட்ட நிர்வாகமும் காவல்கண்காணிப்பாளரும் எங்களை வாழவிடுங்கள் என்று வாழ்க்கை கேட்டு வந்திருக்கிறோம். கெடுபிடிகளைப் பொதுமக்களுக்காக தளர்த்துங்கள்' என்று கண்ணீர் மல்க பேசி முடித்தார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க