வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (18/07/2017)

கடைசி தொடர்பு:14:57 (18/07/2017)

தியாகராஜன் குமாரராஜா படத்திலிருந்து வெளியேறிய பி.சி.ஸ்ரீராம்!

'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கிக் கொண்டிருக்கும் படம் 'அநீதிக் கதைகள்'. விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்கு பி.ஸ்ரீ.ராம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். 

அநீதிக் கதைகள்

தற்போது இந்தப் படத்திலிருந்து பி.சி.ஸ்ரீராம் விலகியிருக்கிறார். சில தேதி பிரச்னைகளால் இந்தப் படத்தில் தொடர்ந்து பி.சி.ஸ்ரீராமால் பணியாற்ற முடியவில்லையாம். பால்கி இயக்கிக் கொண்டிருக்கும் 'பேட்மேன்' (Padman) படப்பிடிப்பில் கலந்து கொள்ளவேண்டியிருப்பதால் தியாகராஜன் குமாரராஜா படத்திலிருந்து விலகியிருக்கிறார். சமீபத்தில் அறிமுக இயக்குநர் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்திலும், தெலுங்கில் கல்யாண் ராம் நடிக்கும் படம் ஒன்றிலும் பி.சி.ஸ்ரீராம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  'ஆரண்ய காண்டம்' படத்தை ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத், இனி 'அநீதிக் கதைகள்' படத்தை ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.