இப்படித்தான் உருவானது தமிழ்நாடு!

மொழிவாரி மாநிலங்கள் 1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதன்படி ஹைதராபாத் மற்றும் இதர சில பகுதிகளை இணைத்து ஆந்திரப்பிரதேசமும், திருவிதாங்கூர் மற்றும் இதர சில பகுதிகளை இணைத்து கேரளமும் உருவானது. ஆனால், சென்னை மாகாணமும் இதரப் பகுதிகளும் பெயர் மாற்றப்படாமல் அப்படியே இருந்தன.  சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கோரி, தியாகி சங்கரலிங்கனார் 73 நாள்கள் பட்டினிப்போராட்டம் நடத்தி உயிர்த் தியாகம் செய்தார்.

தமிழ்நாடு உருவாக காரணமான சங்கரலிங்கனார்

அதன்பிறகு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 1967ல்,  அறிஞர் அண்ணா  முதல்வரானதும் தமிழர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.  பின்னர், ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பது என்பதில் விவாதம் ஏற்பட்டது. இறுதியாக, ம.பொ.சி கூறியபடி 'TAMIL NADU' என்பதை அண்ணா ஏற்றுக்கொண்டார்.

சட்டமன்றத்தில் தீர்மானம்

அதன்படி, அதே நாளில் (18.7.1967)  இதற்கான தீர்மானம்  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில், முதல்வர் அண்ணா 'தமிழ்நாடு' என்று கூற,  உறுப்பினர்கள் அனைவரும் 'வாழ்க' என்று முழங்கினர். இதேபோன்று மூன்று முறை முழக்கமிடப்பட்டது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!