Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களால் எங்களுக்குப் பெருமை - சேலம் காவலரை வாழ்த்திய ரயில்வே

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயலும்போது தவறி விழுந்தவரை, ரயில்வே காவலர் காப்பாற்றினார். தென்னக ரயில்வே சேலம் பிரிவு, அவரைப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளது. 


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், நேற்று சென்னை-தாதர் இடையே இயக்கப்படும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படத் தயாரானது. அப்போது வட மாநில இளைஞர் ஒருவர், ஓடும் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏற முயன்றார். 

அப்போது தவறி விழுந்த அந்த இளைஞர், ரயில் வண்டிக்கும் நடைமேடைக்கும் நடுவில் மாட்டிக்கொண்டார். ரயில் ஓடத் தொடங்கியதால், அந்த இளைஞரையும் இழுத்துச்சென்றது. அப்போது, அதே நடைமேடையில் பணியில் இருந்த காவலர் சண்முகம், விரைவாகச் செயல்பட்டு, வேகமாக அந்த இளைஞரை வெளியே இழுத்தார். இதனால், அந்த இளைஞர் சிறு காயம்கூட இல்லாமல் தப்பித்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன.   


பின்னர் அந்த இளைஞர், அதே ரயிலில் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டார். சேலம் ரயில்வே காவலரான அவருக்கு, தற்போது வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. சேலம் கோட்ட மேலாளர் சண்முகத்தின் செயலைப் பாராட்டி, தென்னக ரயில்வே சார்பாக ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதில், காவலர் சண்முகத்தை நினைத்துப் பெருமைகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close