Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்த ட்விட்டர் அக்கவுன்ட் என்னுடையதில்லை - ஆர்த்தி!

ஆர்த்தி


'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகும் ஆர்த்தியை டார்கெட் செய்து ஏதாவது ஒரு மீம்ஸ் அல்லது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. 'நான் நானாக இருக்கிறேன். உண்மையாகவே இருக்க விரும்புகிறேன்' எனக் கூறிவருகிறார். 'விஜய் டிவி, எந்த விதத்திலும் பிக் பாஸ் பற்றி பேசக்கூடாது என்று சொல்லியிருக்கும் தருவாயில், தற்போது அவரது பெயரில் உள்ள ட்விட்டர் அக்கவுன்ட்டில் தொடந்து ஒவ்வொருவரின் கேள்விக்கும் பதிலளித்துவருகிறார்.

இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, 'நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியுது. நான் நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகு, இன்னும் ட்விட்டர் அக்கவுன்ட்டை ஓப்பன் செய்யவே இல்லை. இது, என்னுடைய அக்கவுன்ட் கிடையாது. நீண்ட நாள்களாக யாரோ பயன்படுத்தி வருகிறார்கள்' என்றார். 

ஆர்த்தி


2013-ம் ஆண்டு கிரியேட் செய்யப்பட்டதாக, இந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிக்கடி அந்த  ட்விட்டர் பக்கத்தில், 'ஆர்த்தி தல ரசிகை' என்றும், 'பிக் பாஸ்' பற்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலும் வந்துகொண்டிருக்கிறது. ஆர்த்தி வெளியில் வந்த நாளிலிருந்து, 'எனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி'  ஹேர் ஸ்டைல் பற்றிய ஒரு மீமுக்கு 'விக் வைத்திக்கிறேன்' போன்ற பல பதில்களை ஆர்த்தி என்கிற பெயரிலுள்ள ட்விட்டர் பக்கத்தில் பதிவாகிவருகிறது. இதை யார் ஆரம்பித்திருப்பார்கள் என்பது பற்றித் தெரியவில்லை' என்கிறார்கள் நெட்டிசன்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement