குப்பைக்கிடங்கிலா வாழ்க்கை இருக்கிறது? | Is there a garbage warehouse?

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (18/07/2017)

கடைசி தொடர்பு:18:01 (19/07/2017)

குப்பைக்கிடங்கிலா வாழ்க்கை இருக்கிறது?

குப்பைக்கிடங்கு

சென்னை மாநகருக்கு அருகில் அமைந்துள்ள மாவட்டம் காஞ்சிபுரம். கல்விக்குப் பெயர்போன இந்நகரத்தில்தான் பல சிறுவர்கள் பள்ளி வாழ்க்கையைத் தொலைத்து குப்பை மேட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். 

காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கும் குப்பைகளையும் மருத்துவமனைக்கழிவுகளான ஊசிகள், பேண்டேஜ்கள், ரசாயனக்கழிவுகள் என அனைத்தையும் நகராட்சி சேகரித்து நத்தம்பேட்டை என்ற கிராமத்தில் கொட்டிவிடுகிறது. இதனால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறுவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் ஆபத்து நிறைந்த இந்தக் குப்பைக் கிடங்கில் சுற்றித்திரிந்து குப்பைகளைச் சேகரித்து சம்பாதிக்கிறார்கள். 

சிறுவர்கள்

பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இதை வன்மையாகக் கண்டித்தாலும், நகராட்சி இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது. 

தமிழகத்தின் தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்திலுள்ள பள்ளி செல்லும் சிறுவர்கள் இளம் வயதிலேயே காசுக்காக குப்பைக் கிடங்கில் தங்கள் வாழ்க்கையைப் பறிகொடுத்திருக்கும் அவல நிலையைச் சரிசெய்து சிறுவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் குரலாக ஒலிக்கிறது. 


[X] Close

[X] Close