Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் களமிறங்கும் மாணவர்கள்...!

ஹைட்ரோ கார்பன்  கதிராமங்கலம்

திராமங்கலம், நெடுவாசல் பிரச்னைகளுக்காக அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராடும் மக்களுக்கு ஆதரவாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதேபோல், சேலம் அரசு கலைக்கல்லூரி, திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், ஏராளமான மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் ஆங்காங்கே தொடர்ந்துவரும் நிலையில், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இன்று வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி நுழைவாயில் முன்பு, "நேற்று நெடுவாசல், இன்று கதிராமங்கலம், நாளை உங்கள் ஊராக இருக்கலாம்", "நெடுவாசலை மீட்போம்; விவசாயத்தைக் காப்போம்", "உணவு அளிக்கும் உழவனின் உரிமை மீட்புப் போராட்டம்" என்ற முழக்கங்களுடன் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு மற்ற மாணவர்களிடையேயும் ஆதரவு பெருகியதால், பெருமளவிலான மாணவர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் போலீஸார், மாணவர்களை அழைத்துப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு மரியாதைக் கொடுங்கள் என கலைந்து செல்லும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்துப் போராடிவருவதுடன், மாவட்ட ஆட்சியர் தங்களிடம் நேரில்வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இந்தப் பிரச்னைக்கு அரசு உடனடித் தீர்வுகாண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் பெயர், அடையாள அட்டை போன்ற விவரங்களைக் குறித்துக்கொள்வதால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

ஹைட்ரோ கார்பன் கதிராமங்கலம்

இந்நிலையில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேரைக் கல்லூரி நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது. ஆனால்மாணவர்களோ தாங்கள் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 
புதுக்கோட்டையில் போராடும் மாணவர்களில் ஒருவரான விஜய், "கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல மாணவர்கள் இதற்காகக் போராடக்கூடாது என நினைக்கிறது. நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட போராட்டங்களில் இதுவரை மாணவர்கள் பரவலாக பங்கெடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது மாணவர்கள் களமிறங்க ஆரம்பித்துள்ளோம். நிச்சயம் வெற்றிபெறுவோம். போராடும் எங்களை, போலீஸார் 'கல்லூரி நுழைவாயிலுக்கு வெளியே போராடினால் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும்' என்கிறார்கள். கல்லூரிக்கு உள்ளே போராடினால் கல்லூரி நிர்வாகமோ, 'கல்லூரிக்குள் போராடக்கூடாது' என்று வெளியேறச் சொல்கிறது. கூடவே, கல்லூரி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கழற்றச் சொல்கிறார்கள். மாணவர்கள் என்கிற அடையாளத்துடன் போராடக்கூடாது என நினைக்கிறார்கள். இப்படியான அடக்குமுறைகள் ஒருபோதும், தீர்வைத் தராது. போராடும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட போராட்டங்களுக்கு ஆதரவாக மாணவர்கள் களமிறங்கி வரும் நிலையில், அரசு மாணவர்களை ஒடுக்க பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு வருகிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close