மகளிர் உலகக் கோப்பை : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இங்கிலாந்துக்கு இலக்கு 219 ரன்கள்

மகளிர் உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் இன்று மோதியுள்ளன. 

பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பேட்டிங்கைத்  தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து பவுலர்கள் அபாரமாக பந்துவீசியதால் ஆரம்பத்தில் இருந்தே தென் ஆப்ரிக்க அணியின் ரன்ரேட் மந்தமாகவே இருந்தது. லாரா வால்ட்வார்ட் நூறு பந்துகளைச் சந்தித்து 66 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 32 ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது தென் ஆப்ரிக்க அணி. 

இங்கிலாந்து

200 ரன்கள் அடித்தால் பெரியவிஷயம்தான் என எதிராபார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் நீ கெர்க்குடன் இணைந்த டு ப்ரீஸ் அபாரமாக விளையாடினார். அவர் 95 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐம்பது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது தென் ஆப்ரிக்க அணி. சொந்த மண்ணில் உலக கோப்பைத் தொடரை விளையாடும் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு இந்தப் போட்டியில் 219 ரன்களை எடுக்க வேண்டும். முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறப்போவது இங்கிலாந்தா? அல்லது தென் ஆப்ரிக்காவா? என்பது இன்னும் மூன்று மணிநேரத்துக்குள் தெரிந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!