குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுள்ள மாணவி வளர்மதியைச் சந்தித்த வழக்கறிஞர் குழு! | Advocates team met Valarmathi

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (18/07/2017)

கடைசி தொடர்பு:19:25 (18/07/2017)

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுள்ள மாணவி வளர்மதியைச் சந்தித்த வழக்கறிஞர் குழு!

valarmathi

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதியை வழக்கறிஞர்கள் குழு இன்று மாலை சந்தித்துள்ளது.

வளர்மதியைச் சந்தித்த வழக்கறிஞர்கள் குழு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வளர்மதி மீது சமூகப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான வழக்குகள், பிணையில் வரக்கூடிய வழக்குகள் மட்டுமே இருக்கிறது. இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 'இயற்கை பாதுகாப்புக் குழு' என்ற பெயரில் போராடிய ஒரு மாணவி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜாமீனில் வெளியே வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் குண்டர் சட்டம் போட்டுள்ளோம் என்று சேலம் காவல்துறை ஆணையர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்மதி வெளியில் வரக் கூடாது என்று திட்டமிட்டே குண்டர் சட்டத்தைத் தவறாகப் பிரயோகித்திருக்கிறார்கள்.

நாங்கள் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close