Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலை எச்சரிக்கும் தமிழக அமைச்சர்கள் மீது ஆளுநருக்கு புகார்: புதுக்கோட்டை கமல் ரசிகர்கள் அனுப்பினர்!

 

கமல் ரசிகர்கள்நடிகர் கமல் நடத்திவரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி சர்ச்சையாகிவருகிறது. அவரை பல்வேறு அமைப்புகள், கடுமையாக விமர்சித்துவருகின்றன. அதோடு, தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலை கமல் விமர்சனம் செய்து பேசியதால், அ.தி.மு.க. அமைச்சர்கள் எச்சரித்துவருகின்றனர். மேலும், இந்துமக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கமலை எதிர்த்து வருகின்றனர். இன்னும் ஒருபடி மேலே போன இந்து இளைஞர் பேரவையினர், கமலுக்குத் திருவோடு அனுப்பும் போராட்டத்தை மதுரையில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை ஒன்றிய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் சங்கர் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கமலை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, இன்று ஆளுநருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

நம்மிடம் பேசிய சங்கர்,

“தமிழக அரசியல் மட்டுமல்ல. உலக அளவிலான அனைத்திலும் அரசியல்தான் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். விமர்சனங்களை தாங்கிச் செய்யப்பட்ட அரசியலே ஓங்கி வளர்ந்துள்ளது. ஆனால், தமிழக அரசியலில் விமர்சனங்களையும் விமர்சிப்பவர்களையும் கீழ்த் தரமாக நடத்தும் போக்கு, சமீபகாலமாக ஆளுங்கட்சியினர் கடைபிடித்துவருகின்றனர். ஓர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர், தமிழக அரசியலில் அனைத்துத் துறையிலும் ஊழல் பரவியுள்ளது என கமல் கூறியுள்ளாரே எனக் கேட்டதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கமலை மிக மோசமாக ஒருமையில் பேசியிருக்கிறார். மேலும், மற்ற அமைச்சர்களும் எச்சரிக்கும் தொனியில் பேசிவருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close