Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”தென் மாநில மக்களுக்கு அரசியல் அந்தஸ்து அளித்தவர்”: மோடியைப் பாராட்டிய ரங்கசாமி

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட வெங்கைய நாயுடுவைத் தேர்ந்தெடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.                    

இதுகுறித்து ரங்கசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பிரதமர் மோடி தலைமையில் செயல்படும் பா.ஜ.க. அரசின் ஆதரவுடன், இந்திய துணைக் கண்டத்தின் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வெங்கைய நாயுடுவுக்கு என்.ஆர் காங்கிரஸ் முழு மனதுடன் வரவேற்பையும், ஆதரவையும் தெரிவிக்கிறது. அவர் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம். துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட உள்ள வெங்கைய நாயுடு, நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உடையவர். பல்வேறு பதவிகளில் பணியாற்றி பதவிக்குப் பெருமைசேர்த்தவர்.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அரசியல் பாகுபாடு இல்லாமல் அன்புடன் பழகக்கூடியவர். மேலும், புதுவைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவருவதில் முக்கியப் பங்குவகித்தவர்.  வெங்கைய நாயுடுவைத் தேர்வுசெய்து, தென் மாநில மக்களுக்கு அரசியல் அந்தஸ்து அளித்த மோடிக்கும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close