வெளியிடப்பட்ட நேரம்: 00:32 (19/07/2017)

கடைசி தொடர்பு:00:32 (19/07/2017)

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் விபத்து... ஒருவர் பலி!

கோடம்பாக்கம் விபத்து

சென்னை, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இன்று இரவு 10.30 மணியளவில் ஒரு காரை ஓவர் டேக் செய்ய முயன்றுள்ளனர் குடி போதையில் வந்த இருவர். போதையில் இருந்ததால், காரை ஓவர் டேக் செய்ய முடியாமல் அவர்கள் கீழே விழுந்துள்ளனர். இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழுந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தினால் கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விபத்தில் பலியானவர் குறித்தும் உடனிருந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நகரின் முக்கிய பகுதியில் நடந்த விபத்தினால் அந்த பகுதியில் பரபரப்பானது. 
 

விபத்து உள்ளான பைக்