துணை ஜானாதிபதி தேர்தல்... அணி மாறிய நவீன் பட்நாயக்..!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், நடந்து முடிந்த ஜானாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்-க்கு ஆதரவு என்று அறிவித்து இருந்தார். நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கடந்த திங்கள்கிழமை நடந்த ஜானாதிபதி தேர்தலில் பா.ஜ.க-வை ஆதரித்தனர். இந்நிலையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை ஆதரிக்கப்போவதாக நவின் பட்நாயக் அறிவித்துள்ளார்.

நவின் பட்நாயக்

இதுகுறித்து, பா.ஜ.க நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் கலைகேஷ் ''பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருப்பது போல நவின் பட்நாயக் செயல்படுகிறார்'' என்று கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை ஆதரிப்பது ஏன் என்பதற்கான காரணத்தை பட்நாயக் சொல்லி இருக்கிறார். 'தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கோபால கிருஷ்ண காந்தியை தெரியும் என்றும் பழைய மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பரை ஆதரிக்கிறேன்' என்று அவர் கூறி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!