சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..! ஆர்.டி.ஐ-யில் அம்பலம்

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சுங்கச்சாவடி


இந்தியாவில் உள்ள தேசிய நெடுங்சாலைகளில் பயணம் செய்யும்போது கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கார், லாரி என வாகனத்திற்கு வாகனம் மாறுபடும். 

சுங்கச்சாவடி

இந்தக் கட்டண விவகாரத்தை வைத்து, பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கேட்டிருந்தார். அதற்கு விளக்கமளித்த அரசு, சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை என்றும் மாறாக அது சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடியில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுங்கச்சாவடிகளில் மிக நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்கும் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிய வந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!