Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசுக்குக் கோரிக்கை விடுத்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!

 தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதுமிருந்து பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசுத்துறை ஊழியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கார்களிலும், வாடகை வேன்களிலும் புறப்பட்டு வந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அலுவக நேரம் முடிந்து, மாலை 5 மணிக்குப் பிறகே இந்தப் போராட்டம் தொடங்கியது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து, தொடர் முழக்கங்களை இட்டவாறு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதில், தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்.
பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தைப் பாரபட்சமின்றி அனைவருக்கும் அமல்படுத்தியாக வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாகவே, 20 சதவிகித இடைக்கால நிவாரணத்தை அரசு கட்டாயமாக வழங்கிட வேண்டும். அதிகப்படியான ஆசிரியர், அரசு ஊழியர்களை உறுப்பினர்களாகக்கொண்டுள்ள  ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கும் விதமாக, எங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைத் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,  ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close