Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புளியறை பகுதியில் பதுங்கிய புலி... பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மாவட்டம் புளியறை வனப்பகுதியில், மக்களின் குடியிருப்புக்கு அருகே பதுங்கியுள்ள புலி, மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டைக் கடித்து இழுத்துச் சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Tiger

Representational Image

கேரள-தமிழக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், நெல்லை மாவட்டம் புளியறை கிராமம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில், இடையர்தவணை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள், பகவதிபுரம் பொத்தை பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, பாய்ந்து வந்த புலி ஒன்று மிரட்டியுள்ளது. அதனால் அச்சமடைந்த சிறுவர்கள், மாடுகளைத் திருப்பிக்கொண்டு ஊருக்குத் திரும்ப முயற்சித்துள்ளனர்.

அப்போது மாடுகள்மீது பாய்ந்த புலி, ஒரு மாட்டைக் கடித்து இழுத்துச் சென்றுவிட்டது. பயத்தில் மாடுகளுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த சிறுவர்கள், ஊருக்குச் சென்று நடந்த விவரத்தை பொதுமக்களிடம் தெரிவித்தனர். உடனடியாக கிராமத்து மக்கள், புலி இழுத்துச் சென்ற மாட்டைத் தேடிச்சென்றனர். கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், அந்த மாட்டின் மிஞ்சிய பாகங்களும் எலும்புகளும்  கிடந்துள்ளன.

மாட்டைப் புலி அடித்துத் தின்றதை அறிந்த பொதுமக்கள், பீதியில் உடனடியாக அங்கிருந்து திரும்பிவிட்டனர். மக்கள் குடியிருக்கும் பகுதியின் அருகில் புலியின் நடமாட்டம் இருப்பது தொடர்பாக பயத்தில் உள்ள பொதுமக்கள், புலியைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இந்தப் பகுதியில், ஏற்கெனவே சிறுத்தை நடமாட்டம் அதிமாக இருப்பது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிறுத்தை ஒன்று நாள்தோறும் ஆடுகளைத் தூக்கிச்சென்றது. அதைப் பிடிக்க வனத்துறையினர் 10 இடங்களில் கூண்டு அமைத்தனர். ஆனாலும், அந்தச் சிறுத்தை இதுவரையிலும் வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கவே இல்லை. இந்த நிலையில், தற்போது புலியின் நடமாட்டம் இருப்பதை அறிந்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close