Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் தம்பதிகள்!

இந்திய மருத்துவர்கள், நான்கு மாத பாகிஸ்தான் குழந்தையின் உயிரை மீட்டுக்கொடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கு நன்றி சொன்ன பாகிஸ்தான் தம்பதி

பாகிஸ்தானைச் சேர்ந்த சித்திக் கன்வால்-ஆனம் தம்பதியின் நான்கு மாத மகன் ரோஹனுக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. பாகிஸ்தானில் சிகிச்சையளிக்க வசதி இல்லை. வெளிநாட்டுக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்கும்படி பெற்றோரிடம் மருத்துவர்கள் வலியுறுத்தினர். எல்லையில் நிலவிவரும் பதற்றம் காரணமாக, தம்பதிக்கு விசா அளிக்க இந்திய அதிகாரிகள் மறுத்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வாரஜ், தலையிட்டதன் பேரில் விசா வழங்கப்பட்டது. நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 

சிக்கல் நிறைந்த அறுவைசிகிச்சை ஒன்றை டாக்டர்கள் வெற்றிகரமாகச் செய்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர். குழந்தை உடல்நலம் தேறியதையடுத்து, பாகிஸ்தானுக்கு அனுப்பும் விழா நடந்தது. இந்திய அன்பில் நெகிழ்ந்துபோன பெற்றோர், '' எங்க குழந்தைக்கு இப்படி ஒரு நோய் இருப்பது தெரிய வந்ததும் துடித்துப் போனாம். உதவி கேட்டு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தும் பதில் வரவில்லை. இந்தியா ஸ்பெஷல் கேர் எடுத்து, எங்கள் குழந்தையைக் காப்பாற்றித் தந்துள்ளது. நன்றியைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை ''என்றனர் கண்ணீருடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close