Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதி படத்துக்கு சென்சார் முடிந்தது!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘பொதுவாக என்மனசு தங்கம்’ படத்துக்கான சென்சார் முடிந்தது. 

உதயநிதி

ரஜினி பட டைட்டிலான ‘மனிதனை, முந்தைய படத்துக்கு டிக் செய்த உதயநிதி, தற்போது ரஜினி நடித்த ‘முரட்டுக்காளை’ படப் பாடல் வரியான ’பொதுவாக என்மனசு தங்கம்’ இதையே பட  டைட்டிலாகத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இந்தப் படம் தணிக்கைக்காக சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது. 

நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை, தளபதி பிரபு இயக்கிவருகிறார். இவர், ’ரஜினிமுருகன்’ இயக்குநர் பொன்ராமிடன் அசோசியேட்டாகப் பணியாற்றியவர். பொன்ராம் பட ஸ்டைலிலேயே காமெடி கலந்த ஃபேமிலி என்டர்டெயினாகவே படத்தை இயக்கியிருக்கிறார் பிரபு.  

பார்த்திபன் முக்கியரோலில் நடித்திருக்கிறார். காமெடி ரோலில் சூரி நடிக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார்.தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. ஆகஸ்ட்டில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின், தற்போது கெளரவ் இயக்கத்தில் ‘இப்படை வெல்லும்’ மற்றும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்துவருகிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close